நடிகர் தாடி பாலாஜியை பிரிந்து வாழும் அவரது மனைவி நித்யா, எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை குடிக்காரன், ஆத்திரக்காரன் என்று குற்றஞ்சாட்டியவர் ஆத்திரத்தால் செய்த விபரீத செயல்..
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கடுத்துவேறுபாட்டால் பிரிந்து சென்றார்.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவர் தாடி பாலாஜியுடன் சேர்வது போல நடித்த நித்யா , உண்மையில் சேர்ந்து வாழாமல் மாதவரம் பொன்னியம்மன் மேடு 2 வது தெருவில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.
தனது வீட்டின் எதிரே கார் நிறுத்துவது தொடர்பாக நித்தியாவுக்கும், எதிர் வீட்டில் வசிக்கின்ற ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி என்பவருடன் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் ஆசிரியர் மணியின் காரில் சரமாரியாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் கையில் கல் எடுத்து வந்து காரை சேதப்படுத்தியது நித்தியா என்பது தெரியவந்தது.
இதையடுத்து நித்தியாவை கைது செய்த மாதவரம் போலீசார் , அவரது குழந்தையின் நலன் கருதி இனி இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
மது போதையில் கணவர் பாலாஜி, தன்னிடம் ஆத்திரக்காரணாக நடந்து கொண்டதாக கூறி வீடியோ வெளியிட்டு கணவரை பிரிந்த நித்யா, ஆத்திரத்தில் கையில் எடுத்த கல், அவரை கிரிமினல் வழக்கில் சிக்கவைத்துள்ளது