ஒரு நாள் கால் சீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்ற காமெடி நடிகரான கஞ்சா கருப்பு , சொந்தபடம் எடுத்து படம் தயாரித்து கடனாளியானதால் தற்போது, வாடகை வீட்டில் வசிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் படத்தில் கஞ்சா குடிக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கருப்பு ராஜா தான் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு ஆனார்.
சிவகங்கையை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, அமீர் இயக்கிய ராம், பருத்தி வீரன் படங்கள் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது
சசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் காசி என்ற குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால்,சசிக்குமார், அருண்விஜய் உள்ளிட்டோரின் படங்கள் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கறுப்பு பிசியாக இருந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் கால் சீட்டுக்கு 5 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றவர்.
2010ம் ஆண்டு சங்கீதா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு தனட்க்கு சினிமா வய்ப்பளித்த இயக்குனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது வீட்டிற்கு பாலா- அமீர் இல்லம் என்று பெயர் சூட்டினார்.
நன்றாக பணம் சம்பாதித்த நிலையில், 2014ம் ஆண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.
ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
அங்கே இவரால் தாக்குபிடிக்க முடியாததால், 14 நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
அண்மையில் மஞ்சக்குருவி என்ற படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு, படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு பலர் ஆலோசனை சொன்னார்கள்.
நான் அதை கேட்கவில்லை என்றும் கையில் இருந்த பணம் கரைந்து போனது படம் பாதி முடிந்தபோதுதான் தனக்கு தெரிந்ததாக கூறினார்.
தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் என்று போர்வெல் படத்தின் இயக்குநர் சொன்னதாக தெரிவித்த கஞ்சா கருப்பு, தான் உழைத்து களைச்சி பணத்தில் வாங்கிய பாலா - அமீர் இல்லத்தை விற்று விட்டு தற்போது, 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்த்து வசிப்பதாகவும் நல்ல நிலைக்கு வந்து விட்டால் இன்னும் 100 படம் பண்ணுவேன் என்று கஞ்சா கருப்பு நம்பிக்கை தெரிவித்தார்