கடலூர் அருகே கொடியேற்றம் பிரச்னையில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடி ஏற்ற பாமக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த கொடிக்கம்பத்தில் திருமாவளவன் கொடியேற்ற போவதாக தகவல் பரவியதை அடுத்து பாமகவினர் அங்கு திரண்டனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.