செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று தொடக்கம்

Nov 20, 2022 06:13:16 AM

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இன்று தொடங்குவதையொட்டி கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது. விளையாட்டை நேரில் காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இன்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. இதையொட்டி ஒட்டுமொத்த கத்தார் தேசமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அடுத்த மாதம் 18-ம்தேதி வரை நடைபெறும் கால்பந்து தொடரில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவற்றின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரசிகர்கள் அலை அலையாக குவிந்து வருகின்றனர். பூங்காக்கள், திறந்தவெளிகளில் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உலா வருகின்றனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக 17 லட்சம் கோடி ரூபாயை கத்தார் செலவிட இருப்பதாகக் கூறப்படுகிறது. போட்டியை நேரில் கண்டு ரசிக்க சுமார் 15 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்காக குடியிருப்புகள், ஓட்டல்கள், ஆயிரக்கணக்கான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அண்டை நாடுகளில் தங்கி போட்டிகளைக் காண கத்தாருக்கு செல்லவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்காக ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கத்தார் செய்துள்ளது. நேரில் காண முடியாத ரசிகர்களுக்காக பிரமாண்ட திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

இப்போட்டியில் விளையாட உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் வருகை தந்துள்ளனர். அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சி, போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர், பிரான்சின் க்ளியன் எம்பாப், பெல்ஜியம் அணியின் கெவின் டி ப்ரூயின் ஆகியோரின் ஆட்டங்களால் மைதானம் களைகட்டும் என எதிர்பார்க்கலாம். கரிம் பென்சிமா, ஹேரி கேன், வினிசியஸ், லுகா மோட்ரிக் ஆகியோரின் ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வாய்ப்புள்ளது.

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement
நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி..!
ஹெலிகாப்டர் மூலம் 'அடிடாஸ்' நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மாதிரி கால்பந்து அறிமுகம்...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
சவுதி அரேபியாவில் மெஸ்ஸி - ரொனால்டோ பங்கேற்ற காட்சிக் கால்பந்து போட்டியைக் காண 21 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை செலுத்தி டிக்கெட் பெற்ற சவூதி தொழிலதிபர்
ஈராக் - ஓமன் மோதும் கல்ஃப் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண அரங்கிற்குள் சுவர் ஏறி குதித்த ரசிகர்கள்..!
பாஜகவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது பாலியல் புகார்..!
டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு (WFI) எதிராக போராட்டம்...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் சுப்மன் கில்

Advertisement
Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

Posted Jan 28, 2023 in சென்னை,Big Stories,

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..

Posted Jan 28, 2023 in அரசியல்,வீடியோ,Big Stories,

அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?


Advertisement