செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Oct 05, 2022 02:49:18 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களின் குழந்தைத் திருமண விவகாரத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 2பேரைக் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இதன் மீது ஆதாரம் எதுவும் இல்லாமல் வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து குழந்தை திருமணங்கள் ஆதாரத்துடன் வெளிவரும் நிலையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக கடந்த வாரம் 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் ஒரு சம்பவம் வெளிவந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரத்தில் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், மணமகனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர், தாய் தங்கம்மாள் உள்ளிட்ட 6பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் மணமகனின் அண்ணன் சூர்யா மற்றும் சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பத்ரிசன் தீட்சிதர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி
தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்
மடியில் பயணம் நொடியில் மரணம் புத்திசொன்னா புளிக்குதா..? 2k காதல் ஜோடியின் அட்ராசிட்டி
கையில் இருந்த பணம் போச்சு வாடகை வீட்டுக்கு வந்துட்டேன் இன்னும் 100 படம் பண்ணுவேன்..! நம்பிக்கை இழக்காத கஞ்சா கருப்பு

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement