வேலூர் பொன்னை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியில் கவனம் செலுத்தாத இரண்டு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது பொதுமக்கள் புகாரளித்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கவும், மருந்துகள் இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.