கர்நாடக மாநிலத்தில், நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தலித் மற்றும் லிங்காயத் சமூகத்தவரின் விருந்தில் பங்கேற்று உணவருந்தினார்.
பதனவலு என்ற பகுதியில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்த அவர், மரக்கன்றுகளையும் நட்டார். ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்க, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகா செல்கிறார்.