செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விமானப்படையில் இலகுரக ஹெலிகாப்டர்கள்.. இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை..!

Oct 03, 2022 05:58:58 PM

விமானப்படையின் திறனை மேலும் வலுவூட்டும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்பணித்தார்.

இந்திய விமானப்படைக்கு 10, ராணுவத்திற்கு 5 என மொத்தம் 15 இலகுரக ஹெலிகாப்டர்களை 3887 கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இதன் முதல் தொகுப்பு இன்று விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விமானப்டை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்திரி மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். பிரச்சாந்த் என்று இந்த ஹெலிகாப்டர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப்பகுதிகளுக்கு அதி நவீன ஆயுதங்களுடன் துரிதமாக சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஹெலிகாப்டர்கள் என்று கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் ராஜ்சிங், இலகுரக ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டார்

நவீன ரக துருவ் ரக ஹெலிகாப்டர்கள் போன்று கவச பாதுகாப்பு கொண்ட இந்த இலகுரக ஹெலிகாப்டர்களை அனைத்து காலநிலைகளிலும் இயக்க முடியும். இரவு நேரத்திலும் இதனால் எதிரிகளின் நிலை மீது துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். ட்ரோன்களையும் தாக்கி அழிக்கும் திறன் படைத்த இந்த ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நன்றாக பயன்படுத்த முடியும்.b

 

 


Advertisement
திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்..!
"இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டனர்" - பிரதமர் மோடி
சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதால் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபாடு
ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதுதான்-மத்திய அரசு திட்டவட்டம்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் முனையத்தின் வீடியோ வெளியீடு
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு செல்லுமா? 11ந் தேதி தீர்ப்பு

Advertisement
Posted Dec 08, 2023 in சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 08, 2023 in இந்தியா,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...


Advertisement