செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

2k கிட்ஸ் விபரீத காதல்.. மாணவியை எரிச்சாச்சி.. பையனை எரிக்க முயற்சி.. தூக்கிட்டு வீடியோ வெளியிட்ட கொடுமை..!

Aug 18, 2022 05:26:24 PM

சங்கரன்கோவில் அருகே காதலி இறந்த துக்கத்தில் 16 வயது காதலன் தூக்கிட்டபடி வீடியோ வெளியிட்டு விபரீத முடிவை தேடிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. காதலியை எரித்த அதே இடத்தில் தன்னையும் எரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாயமலை மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டு, சம்பவத்தன்று மதியம் வாட்சப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் "என் காதலி இறந்துவிட்டாள் அதனால் நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், என் காதலியை எரித்த அதே இடத்தில் என்னையும் எரித்துவிடுங்கள்" என கூறியிருந்தார். பின்னர் அந்த பதின்வயது சிறுவன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சடலத்தை மீட்ட சிறுவனின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரிக்க முயற்ச்சித்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேவர்குளம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபரீத 2 k கிட்ஸின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் 10 வகுப்பு படித்து விட்டு பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்று வந்துள்ளான். அவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்து வந்த நிலையில் இவர்களது அறியா பருவ காதல் வீட்டிற்கு தெரியவந்ததும்.

மாணவியை கடுமையாக கண்டித்து , இந்த பையனுடனான பழக்கத்திற்கு தடை போட்டனர். இதனால் விரக்தி அடைந்து மாணவி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் எரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் கடுமையான மன உளைச்சலுடன் சுற்றி வந்த இந்த விபரீத 2 kகிட் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்க்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!
குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!
தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!
ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?
பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்
ஆள மாத்தி ஹபீப் போ.. 36 லட்சம் ரூபாய் பிம்பிளிக்கி பிளாப்பி..! ஆன்லைன் திருமண ஆப்பு
‘அசுரன்’க்கு ஆதரவளித்த ‘தம்பி’யை கேள்வியால் நெம்பிய ‘திருப்பாச்சி’ இயக்குனர்..!
அடேய் டபரா தலையா.. நீ வேற லெவல்டா.. சிசிடிவிக்கே டஃப்பா..! அடையாளம் தெரியாமல் தவிக்கும் போலீசார்..!
அவன் அசைவற்று கிடக்கிறான்.. அவனோடு சேர்த்து எங்களையும் கருணை கொலை செஞ்சிடுங்க..! ஒரு தாயின் கண்ணீர் மனு..
8 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் பிரியா விடை கொடுத்த மங்கள்யான்.. வெற்றிப்பயணம் நிறைவு..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement