அ.தி.மு.க.வில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணை நடத்தி தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரினால் 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்டவேண்டுமென நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் எழுந்தால், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.