செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செருப்பு வீச்சால் தூக்கம் வரலைங்க... டாக்டர் சரவணன் திடீர் முடிவு...! அண்ணன் வந்தான் தாய் வீடு

Aug 14, 2022 10:51:15 AM

அமைச்சர் கார் மீதான செருப்பு வீச்சால் தனக்கு தூக்கம் வரவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்புக் கேட்ட பாஜகவின் டாக்டர் சரவணன் மீண்டும் தாய் வீடான திமுகவிற்கு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளார்.

பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் நேற்று இரவு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பதாக ஒன்று என்றும் அந்த சம்பவம் தம் மனதை உறுத்தி கொண்டே இருந்ததாகவும் கூறிய சரவணன், தூக்கம் வராத காரணத்தால் நிதியமைச்சரை சந்தித்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மிறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது என்றும் பாஜகவில் உறுதியாக தாம் தொடரப் போவதில்லை என்றும் தெரிவித்த டாக்டர் சரவணன், திமுக தன்னுடைய தாய் வீடு, மீண்டும் தாய் வீட்டிற்கு வந்தாலும் தப்பில்லை எனக் கூறினார்.

தொடர்ந்து தனது டாக்டர் தொழிலை பார்க்க போவதாகவும், காலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் எழுத உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார் .

டாக்டர் சரவணன், முதலில் மதிமுகவில் இருந்து திமுக சென்று எம்.எல்.ஏவாக வென்று, தேர்தலில் மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால் பா.ஜ.கவுக்கு தாவி மறுபடியும் தாய் வீடான திமுகவுக்கே செல்லவிருப்பது குறிப்பிடதக்கது.


Advertisement
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயர், பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம்
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை - இபிஎஸ்
வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் - பதிலளிக்க கோரிய தேர்தல் ஆணையம்...
பணியில் கவனம் செலுத்தாத 2 மருத்துவர்கள் பணியிட மாற்றத்திற்கு பரிந்துரை - மா.சுப்பிரமணியன்...!
ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்-தங்கமணி பேச்சு
கடம்பூர் பேரூராட்சி தேர்தல் - 8 வார்டுகளை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி...
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்..!
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு
பெண்கள் இலவச பேருந்து சேவை குறித்து எதார்த்தமாக பேசியதை பலர் தவறாகப் புரிந்துகொண்டனர் - அமைச்சர் பொன்முடி
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement