செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்

Aug 08, 2022 05:08:26 PM

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ஆட்டத்தில், இந்திய மகளிர் 'பி' அணி சுவிட்சர்லாந்து அணியை முழுமையாக வீழ்த்தியது. தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 9-வது சுற்றில் இந்திய ஓபன் 'ஏ' அணி, பிரேசில் அணியுடன் மோதியது. அப்பிரிவில், இந்திய வீரர்கள் அர்ஜுன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ் விளையாடிய போட்டிகள் டிராவானது.

இந்திய ஓபன் 'பி' பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா அசர்பைஜான் வீரரை வீழ்த்தினார். அதேபிரிவில், தமிழக வீரர் குகேஷ், சரின் நிகல் விளையாடிய போட்டிகள் வெற்றித் தோல்வியின்றி சமனில் முடிந்தன. இந்திய ஓபன் 'சி' பிரிவில், தமிழக வீரர்களான சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோரும், அபிமன்யுவும் பாராகுவே அணி வீரர்களை தோற்கடித்தனர்.

மேலும், மகளிர் 'ஏ' பிரிவில், போலந்து அணிக்கு எதிரான போட்டிகளை கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, தன்யா சச்தேவ் ஆகியோர் டிரா செய்தனர். மகளிர் 'பி' பிரிவில், இந்திய வீராங்கனைகளான, வந்திகா அகர்வால், பத்மினி, மேரி ஆன், திவ்யா ஆகியோர் சுவிட்சர்லாந்து அணி வீராங்கனைகளை முழுமையாக வீழ்த்தினர்.

அதேபோல் மகளிர் 'சி' பிரிவில், தமிழக வீராங்கனை நந்திதா, வர்ஷினி ஆகியோர் எஸ்டோனியா வீராங்கனைகளை தோற்கடித்தனர். அதேபிரிவில், ஈஷா, விஷ்வ வஸ்னாலா விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தன.

 

 


Advertisement
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதியில் சாமி தரிசனம்
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவிப்பு
முன்னாள் கிரிக்கெட் நடுவர் அசாத் ராப் மரடைப்பால் காலமானார்..!
ஐ மெஸ்ஸிய பார்த்துட்டேன்... சிலிர்த்து போன குழந்தைகள்..!
பாகிஸ்தான் அணி தோல்வி குறித்த கேள்வி-கடுப்பாகி இந்திய பத்திரிக்கையாளரின் செல்போனை பறித்த ரமீஸ் ராஜா
டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்
FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான லோகோவை அறிமுகப்படுத்தினார் முதல்வர் நவீன் பட்னாயக்

Advertisement
Posted Sep 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்


Advertisement