செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி..!

Jun 30, 2022 09:15:31 PM

காராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 39 பேரும் அறிவித்தனர். பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார்.

இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இதையடுத்து ஆட்சியமைக்கும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்ட ஆளுநர், இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்நாவிஸ், கூட்டணி அரசில் தான் அமைச்சராக இடம்பெறப் போவதில்லை என்றார். ஆனால் பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அமைச்சரவையில் பட்னாவிஸ் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனை ஏற்று ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்க பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார்.

இரவு 7.30 மணி அளவில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

இருவருக்கும் ஆளுநர் பகத்ஷிங் கோஷியாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சிவசேனா - பாஜக உறுப்பினர்களைக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Advertisement
"இபிஎஸ் உடன் இணைந்து கூட்டுத்தலைமையாக செயல்பட தயார்" - ஓபிஎஸ்
அ.தி.மு.க.வில் இனி இருதரப்பு என்பதே கிடையாது - ஓ.பன்னீர்செல்வம்
தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.பி.முனுசாமி
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
அ.தி.மு.க.வில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!
மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்
செருப்பு வீச்சால் தூக்கம் வரலைங்க... டாக்டர் சரவணன் திடீர் முடிவு...! அண்ணன் வந்தான் தாய் வீடு
கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி
போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement