செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

மராட்டியத்தில் பாஜக - சிவசேனா ஆட்சி... புதிய முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே

Jun 30, 2022 07:25:12 PM

காராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் அறிவித்தனர்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியனார்.

இந்நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் சிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

தங்களுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினர். இதையடுத்து ஆட்சியமைக்கும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்ட ஆளுநர், இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்ததாகவும், அதற்கு மாறாக இந்துத்துவத்துக்கு எதிரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்ததாகவும் தெரிவித்தார்.

தாவூத் இப்ராகிமை எதிர்த்த சிவசேனா, தாவூத்துக்கு உதவியவரைத் தனது அரசில் அமைச்சராகக் கொண்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

பாஜக - சிவசேனா கூட்டணி அரசின் முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே மாலை ஏழரை மணிக்குப் பதவியேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

பதவியேற்றபின் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றும், கூட்டணி அரசில் தான் அமைச்சராக இடம்பெறப் போவதில்லை என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். 


Advertisement
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு..!
"இபிஎஸ் உடன் இணைந்து கூட்டுத்தலைமையாக செயல்பட தயார்" - ஓபிஎஸ்
அ.தி.மு.க.வில் இனி இருதரப்பு என்பதே கிடையாது - ஓ.பன்னீர்செல்வம்
தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.பி.முனுசாமி
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
அ.தி.மு.க.வில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!
மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்
செருப்பு வீச்சால் தூக்கம் வரலைங்க... டாக்டர் சரவணன் திடீர் முடிவு...! அண்ணன் வந்தான் தாய் வீடு
கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement