செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

17 ஆண்டுகளாக மகனை தேடி வந்த தந்தை.. கடைசி வரை முகத்தை பார்க்காமலேயே விபரீத முடிவு..!

May 25, 2022 10:41:57 AM

காணாமல் போன மகனை 17 ஆண்டுகளாக தேடி வந்த தந்தை மகன் முகத்தை கடைசி வரை பார்க்காமலேயே உயிரை மாய்த்து கொண்ட சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர்கள் ராஜூ-மினி தம்பதி. இவருக்கு ராகுல் என்ற மகன் உண்டு. மகன் மீது அலாதி பிரியம் வைத்திருந்தார் ராஜூ. தன் மகன் பெயரிலேயே ராகுல் நிவாஸ் என்ற பெயரில் சொந்த வீட்டையும் கட்டியிருந்தார்.

குவைத்தில் ராஜூ பணி புரிந்து வந்த போது, கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வீட்டருகேயுள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராகுல் காணாமல் போய் விட்டான்.

தகவல் கிடைத்து, அடுத்த நாளே குவைத்தில் இருந்து தாய் நாடு திரும்பினார் ராஜூ. போலீசில் புகாரளித்தார். அவரும் மகனை தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. கேரள போலீஸ், கேரள புலானாய்வுத்துறை , கடைசியில் சி.பி.ஐ வசம் ராகுல் தொலைந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், எந்த பிடியும் இந்த வழக்கில் கிடைக்கவில்லை. ராகுல் காணாமல் போன பிறகு, ராஜூ தம்பதிக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தாள்.

இதற்கிடையே, சிறுவன் கிடைக்கவில்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக 2014 ஆம் ஆண்டு சி.பி.ஐ கொச்சி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. நீதிமன்றமும் அறிக்கையை ஏற்றுக் கொண்டது. கேரள வரலாற்றில் மிகுந்த மர்மமான வழக்கதாக இந்த வழக்கு கருதப்படுகிறது.

இதற்கிடையே, மகன் காணாமல் போனதால் பித்து பிடித்தவர் போல ஆகி விட்டார் ராஜூ. மீண்டும் குவைத்துக்கு வேலைக்கு சென்றவர் உடல் நலமில்லாமல் திரும்பினார். கடந்த மே 18 ஆம் தேதியுடன் ராகுல் காணாமல் போய் 17 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில், மே 22 ஆம் தேதி தன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் ராஜூ. கடைசி வரை மகனின் முகத்தை, பார்க்க முடியாமல் தந்தை ராஜூ தன் உயிரை மாய்த்துக் கொண்டது கேரள மக்களை சோகத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.


Advertisement
புதிய தொழிலாளர் நல கொள்கைகளின் மாற்றங்கள் இன்று முதல் அமல்.!
ஈட்டி எறிதலில் புதிய தேசியச் சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்து
மகாராஷ்டிரத்தில் ஜூலை 4ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு..!
உதய்பூர் படுகொலை: மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்!
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதிப்பு
நாட்டுமக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும்... உச்சநீதிமன்றம் அதிரடி
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சிவசேனா தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒற்றை ஆளாக பாடுபட்டு 32 அடி கிணற்றை தோண்டிய விவசாயி
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த சஞ்சய் ராவத்

Advertisement
Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,சென்னை,Big Stories,

தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எங்க வீட்டு பெண் மீதா கைவக்கிற..? மாணவியிடம் அத்துமீறியவரை சம்ஹாரம் செய்த குடும்பம்..!

Posted Jun 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

Posted Jun 30, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!


Advertisement