கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பிறப்பிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பசவராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், கர்நாடகாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேர ஊரடங்கு வழக்கம் போல் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.