கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சாம்ராஜ்பேட் பகுதியின் மக்கள கூட்டா பார்க் அருகே சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை எழுந்ததை பேருந்து ஓட்டுனர் பார்த்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்திய அவர், பயணிகளை உடனடியாக கீழே இறக்கி உள்ளார்.
பேருந்தின் முன் பக்கத்தில் பற்றிக்கொண்ட தீ மளமளவென பரவி ஓட்டுனர் இருக்கை மற்றும் பயணிகளின் சில இருக்கைகளில் பற்றிக்கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர்.