வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து மனைவி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவை சேர்ந்தவர் 55 வயதான ரவிசந்த்சூரி, இவரது மனைவி வசுந்தரா இவர்களுக்கு திருமணமாகி 30 வருடங்கள் கடந்த நிலையில் மனநிலை சரியில்லாத மகன் உள்ளான். அந்த மகனை வசுந்த்ரா பராமரித்து வந்த நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த வசுந்த்ரா தனது கணவனை கண்டித்துள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை கணவனின் தவறான தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது.
ஒரு பக்கம் மன நிலை சரியில்லாத மகன் மறுபக்கம் மகனை சரியாக கவனித்துக் கொள்ளாமல் காதலி வீடே கதி என்று கிடக்கும் மன்மத கணவன் என்று விரக்தி மன நிலையில் இருந்த வசுந்த்ரா , கடுமையான மன அழுத்தத்தால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
சொல்பேச்சு கேளாத கணவனை பலமாக தாக்கி கீழே விழவைத்து கத்தியால் அவருடைய கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் கணவனின் தலையை பையில் போட்டு எடுத்து சென்று ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று சரணடைந்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
பிறர் மனைவியுடனான தவறான தொடர்பு காரணமாக கணவனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள வசுந்த்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
தவறான உடல் சார்ந்த தேடலால் தந்தை கொல்லப்பட்ட நிலையில் தாய் சிறைக்கு சென்று விட்டதால், மனநிலை சரியில்லாத அவர்களின் மகன் தற்போது ஆதரவற்ற நிலையில் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.