டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர், அதிகாரிகளிடம் இருந்து மறைப்பதற்காக செல்போனை விழுங்கிய நிலையில், அந்த செல்போன் எண்டோஸ்கோபி மூலமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
7 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் கொண்ட அந்த செல்போனை மருத்துவர்கள், snare எனப்படும் கருவியின் உதவியுடன் வாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஜி.பி பண்ட் மருத்துவமனை மருத்துவர் சித்தார்த், அந்த கைதியின் வயிற்றில் எக்ஸ்ரே செய்து பார்த்த போது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், செல்போனை விழுங்குவது மிக கடினம் எனவும் பழக்கப்பட்டவர்களால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.