தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, குமரியில் லேசான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட மலைப்பகுதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.