செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம் வேளாண் சட்ட வாபஸ் மசோதா நிறைவேற்றம்!

Nov 29, 2021 04:47:45 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரின் முதல் நாளில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து, கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் - 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 ஆகியவை மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், 3 புதிய வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அண்மையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார். மேலும், அந்த சட்டங்களை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்தபோது, வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், இது பற்றி விவாதிக்க வேண்டும் என மக்களவையில் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைகள் நிராகரிப்பட்டதை அடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனை அடுத்து பிற்பகல் வேளையில் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தபின் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் நலனிற்காகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டுந்ததாக குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து மக்களவை போல் மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின், புதிய வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்தாகும்.


Advertisement
நாடாளுமன்ற இரு அவைகளும் அறிவிக்கப்பட்ட தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு
இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் செப்டம்பர் இறுதியில் அறிமுகமாகும் எனத் தகவல்!
கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்
காமன்வெல்த் நிறைவுவிழா : தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்..!
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 14 சொகுசு கார்கள்.. கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள்!
துணி துவைக்க சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்..!
பார்த்தா-ஆர்பிதாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது கண்டுபிடுப்பு..!
நாடாளுமன்ற மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 தாக்கல்.. அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
ஆந்திராவில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் மாணவர் உயிரிழப்பு
மேக வெடிப்பால் ஒரே நேரத்தில் பெய்த மிக அதிக கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் செல்லப்பட்ட சாலைகள்..!

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,Big Stories,

விருமன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் சூரி மீது தண்ணீர் கேன் வீச்சு..! மன்னிப்புக்கேட்டார் ஷங்கர் மகள்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்


Advertisement