ஓ.பி.எஸ் செய்து வரும் துரோகத்தை கடவுள் கூட மன்னிக்கமாட்டார் – எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன்

டி.டி.வி தினகரனால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சிக்கும், கட்சி தலைமைக்கு செய்து வரும் துரோகத்தை கடவுள் கூட மன்னிக்கமாட்டார் என ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினகரனின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், சசிகலாவாலோ, தினகரனாலோ தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன