99 வருடங்கள் பழமையான நிலக்கரி நீராவி எஞ்சின்!

99 வருடங்கள் பழமையான நிலக்கரி நீராவி எஞ்சின், உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப் பொருளாக வைக்க மேட்டுப்பாளையத்திலிருந்து கொண்டுவரப்பட்டது.
ஆங்கிலயர்களின் காலத்தில் 100 வருடங்களுக்கு முன்பு குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் போக்குவரத்து துவங்கியது. இதற்காக, நிலக்கரியால் இயங்கும் நீராவி எஞ்சின் 99 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பழமையான அந்த எஞ்சினை உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப் பொருளாக வைக்க, இன்று மேட்டுப்பாளையத்திலிருந்து பயோடீசல் எஞ்சின் உதவியுடன் குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எஞ்சின் குன்னூர் பணிமனையில் பொழிவுப்படுத்தப்பட்டு, உதகை ரயில் நிலைய வளாகத்தில் இன்னும் சில தினங்களில் வைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன