Advertisement

NDTV-யை வாங்க ஸ்பைஸ் ஜெட் துணை நிறுவனர் திட்டம்?

என்.டி.டி.வி. என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியை ஸ்பைஸ் ஜெட்டின் துணை நிறுவனர் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. என்.டி.டி.வி.யின் நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ராய் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், என்.டி.டி.வி.யை, அதன் எடிடோரியல் காப்புரிமையுடன் வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அஜய் சிங் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு பாஜகவின் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அஜய் சிங், என்.டி.டி.வி.யின் கடன் சுமைகளையும் ஏற்றுகொள்ள சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த இருநிறுவனங்களிடையேயான மொத்த ஒப்பந்தம் 600 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன