91-வது பிறந்தநாள் கொண்டாடினார் ராணி இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தமது 91-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தமது பிறந்தநாளன்று மட்டும் பொதுப்பணிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட ராணி எலிசபெத், தமது கணவர், மற்றும் குடும்பத்துடன் விண்ட்ஸர் அரண்மனையில் பிறந்தநாளைக் கொண்டாடினார். ராணியின் பிறந்த நாளை ஒட்டி பக்கிங்காம் அரண்மனை முன் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த இரண்டாம் எலிசபெத், உலகில் மிக அதிகநாள் வாழும் ராணி என பெயர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் காலமானதை அடுத்து இந்தப் பட்டம் அவருக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன