9.3 கோடி பான் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு

இதுவரை 9 கோடியே 30 லட்சம் பான் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது. இருப்பினும், இதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்நிலையில், நாட்டில் 30 கோடி பேர் பான் கார்டு வைத்திருக்கும் நிலையில், அவர்களில் 9 கோடியே 30 லட்சம் பேர், அதாவது வெறும் 30 சதவீதம் பேரே ஆதார், பான் இணைப்பை மேற்கொண்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் மட்டும் 3 கோடி பேர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!