81 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட பரிதாபம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த நொம்புதாளையைச் சேர்ந்த அவர்கள், நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவு அருகே அவர்களை படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் 4 பேரையும் வருகிற 31ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இத்துடன் தமிழகம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 81 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன