டைகர் ஏர் விமான நிறுவனம், ஸ்கூட் நிறுவனத்துடன் இணைப்பு

சிங்கப்பூரை சேர்ந்த டைகர் ஏர் விமான நிறுவனம், ஸ்கூட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதால், ஸ்கூட் விமான கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவன தலைவர் பரத் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை 25-ம் தேதி முதல் ஸ்கூட் விமான சேவை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செயல்பட தொடங்கியது. இவர்கள், டைகர் இணைப்பை கொண்டாடும் வகையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் கட்டணத்தை 7,500 ரூபாயிலிருந்து 5,040 ஆக குறைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு செல்ல, 16,000 ரூபாயிலிருந்து 10,089 ரூபாயாக கட்டணம் குறைக்கக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன