Advertisement

70 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் முட்டை, தக்காளி வீச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் முட்டை, தக்காளி வீசப்பட்டது. கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாட்களில் 70 குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கின் வீட்டில், சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசி எறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனிடையே, ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கடந்த 4ஆம் தேதியே அரசு விடுவித்ததாகவும், அதை, குழந்தைகள் உயிரிழந்த பின், கடந்த வெள்ளிக் கிழமை செலுத்தி மருத்துவமனை நிர்வாகம் ரசீது பெற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன