70 குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையை முதலமைச்சர் நேரில் ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த கோரக்பூர் மருத்துவமனையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு செய்தார்.

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு யோகி ஆதித்யநாத்தும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவும் நேரில் சென்றனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் குழந்தைகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இருவரும் ஆறுதல் கூறினர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7 நாட்களில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன