7-வது தளத்தில் இருந்து விழுந்த BMW கார் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார் நிறுத்தும் கட்டிடத்தின் 7-வது தளத்தில் இருந்து பி.எம்.டபிள்யூ. கார் விழுந்து நொறுங்கியதில், அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர். ஆஸ்டின் நகரில் உள்ள இந்தக் கட்டிடத்தில் பெண் ஒருவர் தனது பி.எம்.டபிள்யூ காரை, 7-வது தளத்தில் நிறுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சலரேட்டரை அவர் அழுத்தி விட்டார். இதனால் 7வது தளத்தில் இருந்து கார் கீழே விழுந்தது. அப்போது கீழே மற்றொருவர் தனது காரை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரது கார் மீது பி.எம்.டபிள்யூ கார் விழுந்தது.

இதைக் கண்ட அவர் காரை வேகமாக நகர்த்தியதால் காயமின்றி தப்பினார். காருக்குள் இருந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன