Advertisement
Advertisement

50 லட்சம் ரூபாயை முறைகேடு செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

சிவகங்கையில் சுமார் 50 லட்சம் ரூபாயை முறைகேடு செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 ஊராட்சிகளில் 49 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரனை கைது செய்த போலீசார், 5 பேரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன