39 இந்தியர்களின் கதி என்ன என்றே தெரியவில்லை-ஈராக் பிரதமர்

ஈராக்கில் மொசூல் நகரில் 39 இந்தியர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டநிலையில் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய போது இந்தியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அவர்கள் பாதுஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆறுதல் கூறியிருந்தார். மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து ஈராக் படைகள் கைப்பற்றியபோதும் இந்தியர்கள் குறித்த தகவல் ஏதுமில்லை.இந்நிலையில் ஈராக் பிரதமரின் அறிவிப்பு இந்தியர்களின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன