3000 பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: செங்கோட்டையன்

தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசு எந்தவிதமான தேர்வுகளை கொண்டுவந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, 412 சிறப்புப் பயிற்சி மையங்களை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.

மேலும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். வரும் 21ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன