3 வயது குழந்தை, ரூ.100 கோடி சொத்துக்களை விடுத்து துறவியாகும் தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 3 வயது பெண் குழந்தை, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விடுத்து, தம்பதியர் இருவர் ஜைன மதத் துறவி ஆக மாறவுள்ளனர்.

நீமுச் மாவட்ட பாஜக முன்னாள் தலைவரின் மகள் அனாமிகாவுக்கும், லண்டனில் படித்து முடித்து இந்தியாவில் தொழில் அதிபராக உள்ள சுமித் ரத்தோருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. அவர்களுக்கு 3 வயதில் அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், 35 வயதே ஆன சுமித்தும், 34 வயதே ஆன அனாமிகாவும் துறவியதாவதாக அறிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எவ்வளவோ கூறியும் ஏற்க மறுத்த தம்பதி வரும் 23-ம் தேதி துறவு பூண்டு மதச்சேவை ஆற்ற உள்ளனர். அவர்களின் மூன்று வயது குழந்தையை வளர்க்க அனாமிகாவின் தந்தை முடிவெடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!