2028ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் பேங்க் ஆப் அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தகவல்

2028ஆம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் அமெரிக்காவின் மூலதனப் பிரிவான மெர்ரில் லிஞ்ச், இந்தியா-2028 என்ற தலைப்பில், இந்திய பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், இதே வேகத்தில் வளர்ச்சி நீடித்தால் 2028-ம் ஆண்டில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றும் மெர்ரில் லின்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன