2022ல் புதிய இந்தியா இலக்கை நோக்கி உறுதியாக முன்னேறுவோம் – பிரதமர் மோடி

2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்குள் புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி உறுதியாக முன்னேறுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி அதனைத் தொடர்ந்து தபோய் ((Dabhoi)) என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். போராட்டங்கள் காரணமாகவும், உலக வங்கி நிதிமறுப்பு உள்ளிட்ட பல்வேறு கடினமான தடைகளையும் கடந்து ரத்தமும் வியர்வையும் சிந்தி அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை மிக முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர், சர்தார் சரோவர் அணை குஜராத் மட்டுமன்றி மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் என்றார். இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கும் கிழக்குப் பகுதி மாநிலங்களின் மின்சாரப் பற்றாக்குறைக்கும் இந்த அணையின் மூலம் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி உறுதியாக முன்னேறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!