2018 மார்ச்சுக்குள் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ இணை இயக்குநர் சர்மா

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குநர் சர்மா கூறியுள்ளார்.

ஒசூர் ஆவலப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செவ்வாய் கிரகத்திற்கு பல நாடுகள் விண்கலம் ஏவ முயன்று முடியாமல் போன நிலையில், இந்தியா முதல் முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அவர் கூறினார். சந்திரனில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன் ஒன்று விண்கலம்தான் கண்டு பிடித்தது என சர்மா தெரிவித்தார். அடுத்து வரும் 4 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 76 செயற்கைக்கோள்கள் தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 15 முதல் 18 செயற்கைக்கோள்களை நம்மால் தயாரிக்க முடியும் என்றும் சர்மா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *