2016-17ல் வங்கிக்கு ரூ.25,104 கோடி வாராக்கடன் உயர்வு – எஸ்.பி.ஐ

வசதியிருந்தும், கடனை திருப்பிச் செலுத்தாத நபர்களால், எஸ்.பி.ஐ. வங்கிக்கு கடந்த நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வாராக்கடன் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில், 5 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன், கடந்த மார்ச் 31ஆம் தேதி மதிப்பீட்டின்படி, 6 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் மட்டும், கடந்த நிதியாண்டில் 25 ஆயிரத்து 104 கோடி ரூபாய் வாராக்கடன் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரத்து 278 கோடி ரூபாய் வாராக்கடன் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

வசதியிருந்தும் பணத்தை திருப்பிச் செலுத்தாத கடனாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனாலேயே, அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன