2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் தடை வருமா ? – விளக்கம் அளிக்க அருண் ஜேட்லீ மறுப்பு

2 ஆயிரம் புதிய ரூபாய் நோட்டுகள் மீண்டும் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆளாகுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துவிட்டார்.

கடந்த நவம்பர் மாதத்தில் பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு ஈடு செய்ய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், அதற்கு சில்லறை மாற்ற முடியாமல் பலர் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திக் கொண்டதால் மீண்டும் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க உள்ளது என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சரும் மறுத்துவிட்டனர்.

கருப்பு பணம் பதுக்குவோரிடம்தான் அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதால் அதை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்ற குழப்பம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன