2-ஆம் உலகப்போரில் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். இண்டியானாபோலிஸ் ((indianapolis)) போர்க்கப்பலின் பாகங்கள், பசிபிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1945 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட இந்தக் கப்பலை, ஜப்பானின் நீர் மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. கப்பலில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.இது அமெரிக்காவின் கடற்படைக்கு பேரிழப்பாகவே கருதப்பட்டது.

கப்பலின் பாகங்களை தேடும் பணி 72 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிலிப்பைன்ஸ் அருகே பசிபிக் கடலில் ஐந்தரை கிலோ மீட்டர் ஆழத்தில், பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன