1741: குளச்சல் போரில் வென்றதன் நினைவு தினம்

கன்னியாகுமரியில், குளச்சல் போரின் வெற்றி தினத்தை கொண்டாடும் விதமாக, ராணுவ வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் துறைமுகத்தில், 1741 ஆம் ஆண்டு நடந்த சண்டையில் டச்சு படைகளை தோற்கடித்து விரட்டினார். இந்த வெற்றியை குறிக்கும் வகையில் குளச்சலில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடைப்பிடிக்கப்பட்ட வீர வணக்க நாளில், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரர்கள் பங்கேற்று, வெற்றித் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன