17 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் மேதாபட்கர்

17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த மேதா பட்கர் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார். சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டதால் நிலம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 27 முதல் மேதா பட்கர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வந்ததால் உடல் நிலை மோசமடைந்தது. எனவே இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல் நலம் தேறியதும் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மேதா பட்கர் தெரிவித்ததால் போலீசார் அவரைக் கைது செய்தனர். ((Dhar)) தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், அங்கும் உண்ணா விரதத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று தன்னுடைய உண்ணா விரதப் போராட்டத்தை மேதாபட்கர் முடித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன