15 வயது சிறுமியின் குழந்தைக்கு 13 வயது சிறுவன் தந்தையான சம்பவம்

கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமியின் குழந்தைக்கு 13 வயது சிறுவன் தந்தையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தனாபுரம் பகுதியில், 11-ம் வகுப்பு சிறுமிக்கு வயிற்றுவலி என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வேறு மருத்துவரிடம் காண்பிக்க அறிவுறுத்திய நிலையில்,வீடு திரும்பியதும் அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின்பேரில் அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை, சாதாரண உடையில் சென்று விசாரித்த போலீசார், சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவன்,சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன