15 நாட்களுக்குப் பின் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பரிசல் சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் கடந்த 15 நாட்களாக பரிசல் இயக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் மாமரத்துகடவு பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வழியாக ஊட்டமலை சென்று மீண்டும் மாமரத்துகடவு வரையிலான வழித்தடத்தில் பரிசல் இயக்க அனுமதி தர வேண்டும் என்று கோரி பரிசல் ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இவ்வழித்தடத்தில் பரிசல் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன