14 வயது சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் உறவுக்கு ஏற்பாடு செய்த காதலன்

கன்னியாகுமரியில் 14 வயது சிறுமியை காதல் என்ற பெயரில் ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டர், லாட்ஜ்களில் வைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து சிறுமியை போலீசார் தேடிவந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று மார்த்தாண்டம் அருகே விரிகோடு என்னும் பகுதியில் ஒரு சிறுமியை நான்கு பேர் இருசக்கரவாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டதை பொதுமக்கள் பார்த்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் சிறுமி பற்றி விசாரித்த போது அவர், கருங்கல்லில் மாயமான சிறுமி என்பது உறுதியானது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் குளச்சல், குறும்பனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணையின் போது, தம்மை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞர் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி கூறினார்.

கடந்த 9 ம் தேதி தாம் காதலித்த இளைஞர் வீட்டிலிருந்து தன்னை அழைத்து சென்று, குளச்சல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ்-ல் வைத்து 4 இளைஞர்களுடன் பாலியல் உறவிற்கு ஆட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டு காதலனின் நண்பர்களான வெவ்வேறு இளைஞர்களும் தம்மை சிதைத்ததை கண்ணீருடன் கூறியுள்ளார் அந்தச் சிறுமி.

நாகர்கோயிலுக்கு அழைத்து செல்ல குறும்பனை மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சென்ற போது தான், பொதுமக்கள் தம்மை மீட்டதாகவும், அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தன்னால் தப்பி வரமுடியவில்லை என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பல இளைஞர்களையும், சிறுமியின் காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன