Advertisement

13 சவரன் நகை, ரூ.7,000ஐ திருடிச் சென்ற மர்மக்கும்பல்

நெல்லையில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப் போட்டு 13 சவரன் நகைகளை மர்மக்கும்பல் திருடிச் சென்றுள்ளது.

கரையிருப்பு அருகே வினோத்ராம் நகரில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், அருணாச்சலம், அவரது மனைவி மற்றும் மகளை அரிவாளைக் காட்டி மிரட்டி, கயிற்றால் கட்டிப் போட்டுள்ளது. பின்னர் 13 சவரன் நகை, 7 ஆயிரம் பணத்தை திருடி விட்டு கும்பல் தப்பியது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன