Advertisement

123வது நாளை எட்டிய ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிலையில் சூடம் ஏற்றி நூதன எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் 123வது நாளை எட்டியுள்ளது.

தினமும் பல்வேறு விதங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினத்தில் பெண்கள் மண்டியிட்டு வெற்றிலையில் சூடம் ஏற்றி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன