12ஆம் வகுப்பு மாணவியை காதலித்த சகமாணவனே கொன்ற கொடூரம்

ஹைதராபாத்தில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை, அந்தப் பெண்ணை காதலித்து வந்த சகமாணவனே கொலை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

அந்த மாணவி, கடந்த சனிக்கிழமை மாலை நண்பர்களைச் சந்திப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், மாணவியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் மாணவியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதி அருகே உள்ள சிசிடிவியில், இளைஞன் போன்ற ஒருவருடன் அந்த மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரசணை மேற்கொண்ட போலீசார், அந்த மாணவியோடு படித்து வந்த சக மாணவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த மாணவி தம்மை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொன்றதாகவும் அந்த மாணவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன