11,12-ம் வகுப்பில் அடிப்படை சட்டத்தை பாடமாக்கக் கோரி வழக்கு

11,12ஆம் வகுப்பில் அடிப்படை சட்டத்தை பாடமாக்க உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ராஜிவ் ராஜா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாணவர்கள் மத்தியில் சட்டத்துறை தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லை என்று கூறியுள்ளார். 11, 12ஆம் வகுப்புகளில் அடிப்படைச் சட்டங்கள் பாடமாக்கப்பட்டால் சட்டப்படிப்புகளில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட உதவும் என்பது அவரது மனுவின் சாராம்சம். இதனை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!